Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது’

T

The Leader Desk

ஜனவரி 26, 2025 • 11:31 AM

‘காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.
  • முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத் தெரிவு, இன்று (26) இடம்பெற்றிருந்தது.
  • குறித்த தெரிவு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரதினம் அன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற இருக்கின்றது.
எழுத்து அளவு:

தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் நிர்வாக தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத் தெரிவு, இன்று (26) இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு  மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி பதவியில் இருந்து விலகியதன் காரணமாக, இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு முல்லைத்தீவு போராட்ட இடத்திற்கு அருகாமையில் இன்று (26)  இடம்பெற்றிருந்தது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோ.கனகனகரஞ்சினி, மன்னார் மாவட்ட தலைவி ம.உதயசந்திரா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஆரம்பமாகிய தெரிவு கூட்டத்தில்

முல்லைத்தீவு மாவட்ட தலைவியாக நி.வசந்தினி, செயலாளராக பொ.கரன், பொருளாளராக நாகேஸ்வரி, உப தலைவராக ப.வீரமணி, உப செயலாளராக றஞ்சினிதேவியும் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தெரிவு கூட்டத்திற்கு  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரதினம் அன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற இருக்கின்றது. குறித்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். அத்தோடு உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என இதன் போது தெரிவித்திருந்தார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...