Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்!

T

The Leader Desk

ஜனவரி 26, 2025 • 4:40 AM

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கையில் ஈடுபட்டதால் நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
  • இச்சம்பவம் நேற்றையதினம்(25) இரவு இடம்பெற்றுள்ளது.
  • இவ்வாறானதொரு நிலையில் குறித்த கடற்பகுதியில் காணப்பட்ட நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் அறுத்தெறியப்பட்டுள்ளது.
  • இவ்வாறு தொடர்ச்சியாக அத்துமீறி இந்திய மீனவர்களின் நடவடிக்கையால் தாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

நடவடிக்கையில் ஈடுபட்டதால் நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நேற்றையதினம்(25) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நேற்றையதினம் இரவு இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதனை அவதானித்த நெடுந்தீவு மீனவர்கள், இந்திய மீனவர்கள் மீது கல்லை கொண்டு தாக்கிய போதிலும் அவர்கள் திருப்பி தாக்கியதாக கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் குறித்த கடற்பகுதியில் காணப்பட்ட  நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் அறுத்தெறியப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக அத்துமீறி இந்திய மீனவர்களின் நடவடிக்கையால் தாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் இன்று (26) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் வந்த மூன்று படகுகளையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (03) மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் (33) இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...