Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இன்று முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

T

The Leader Desk

ஜனவரி 22, 2025 • 3:01 PM

இன்று முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
  • அதன்படி, இந்த பொருட்கள் இன்று (22) முதல் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 995 ரூபாயாகும்.
  • ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 300 ரூபாயாகும்.
எழுத்து அளவு:

நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த பொருட்கள்  இன்று (22) முதல் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 995 ரூபாயாகும்.

ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 300 ரூபாயாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோசிவப்பு கௌப்பியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 765 ரூபாயாகும்.

ஒரு கிலோகிராம்  நெத்திலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 940 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 830 ரூபாயாகும்.

பாஸ்மதி அரிசி கிலோ கிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 645 ரூபாயாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 230 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 288 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 240 ரூபாயாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு | Tamil Leader | We Lead the Nation