Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இந்திய பணச்சலவை மோசடி குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்ட இலங்கையின் க்ரிஸ் டவர் செயற்திட்டம்

T

The Leader Desk

ஜனவரி 20, 2025 • 1:50 PM

இந்திய பணச்சலவை மோசடி குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்ட இலங்கையின் க்ரிஸ் டவர் செயற்திட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்றின் முதலீட்டாளர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் கொழும்பு, கோட்டையின் மையப் பகுதியில் சத்தம் வீதி அருகில் நான்கு ஏக்கர் மற்றும் ஒரு ரூட் காணி, இந்தியாவின் க்ரிஸ் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
  • அதன் காரணமாக, பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் அவர் க்ரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சர்ச்சைக்குரிய வகையில் சேகரித்து 200 கோடி ரூபாய் சொத்துக்கள் தொடர்பில் இந்திய அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், க்ரிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அமித் கட்யால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் மீது பணச்சலவை, நிதிமோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

ஒன்றின் முதலீட்டாளர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் கொழும்பு, கோட்டையின் மையப் பகுதியில் சத்தம் வீதி அருகில் நான்கு ஏக்கர் மற்றும் ஒரு ரூட் காணி, இந்தியாவின் க்ரிஸ் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

க்ரிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அமித் கட்யால் முன்வைத்த விண்ணப்பத்தின் அடிப்படையில், குறித்த காணி சர்ச்சைக்குரிய வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொடுக்கல் வாங்கலின் போது நாமல் ராஜபக்ஷவுக்கு பாரிய தொகையொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்போது தகவல்கள் பரவியிருந்தன.

குறித்த மோசடிகளை விசாரணை செய்ய நல்லாட்சிக் காலத்தில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், அதன் பணிப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, குறித்த விசாரணைகளுக்கு இடையூறு செய்து க்ரிஸ் நிறுவனத்தையும் நாமல் ராஜபக்‌ஷவையும் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

அதன் காரணமாக, பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் அவர் க்ரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் க்ரிஸ் நிறுவனம், இந்திய செல்வந்தர்களை ஏமாற்றி அவர்களின் நிதி மூலம் இலங்கையில் மோசடியாக முதலீடுகளை மேற்கொண்டதாக தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன.

சர்ச்சைக்குரிய வகையில் சேகரித்து 200 கோடி ரூபாய் சொத்துக்கள் தொடர்பில் இந்திய அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், க்ரிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அமித் கட்யால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் மீது பணச்சலவை, நிதிமோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் செயற்படும் க்ரிஸ் டவர் செயற்திட்டமும் பணச்சலவை மூலம் மோசடியாக மேற்கொள்ளப்பட்ட முதலீட்டுத்திட்டங்களில் ஒன்றாக அமலாக்கத்துறையின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...