Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

போலிக் குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை கொடுக்காதீர்கள்!

T

The Leader Desk

ஜனவரி 8, 2025 • 5:06 AM

போலிக் குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை கொடுக்காதீர்கள்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறுஞ்செய்திகளுக்கு, தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
  • வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • ஏழைக் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் உதவித் தொகையை ஜனாதிபதி வழங்குவார் என்ற செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
எழுத்து அளவு:

குறுஞ்செய்திகளுக்கு, தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

“போலி குறுஞ்செய்திகள் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அதிக அளவில் முறைப்பாடுகள் வருகின்றன. ஏழைக் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் உதவித் தொகையை ஜனாதிபதி வழங்குவார் என்ற செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த இணைப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இந்த இணைப்புகளைத் தடுக்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவை போலி இணைப்புகள். இவற்றுக்கு  உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்கினால், உங்கள் வங்கிக் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத அணுகல், மின்னஞ்சல் கணக்குகளுக்கான மூன்றாம் நபர் அணுகல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொள்கிறது" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...