Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் புதிய கோணத்தில் ஆரம்பம்!

T

The Leader Desk

ஜனவரி 7, 2025 • 10:56 AM

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் புதிய கோணத்தில் ஆரம்பம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
  • இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், உயர் நீதிமன்றில் 14 வழக்குகளின் கீழ் 100 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
  • மேலும், செனல் 4 ஊடாக வெளியான விடயங்கள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், உயர் நீதிமன்றில் 14 வழக்குகளின் கீழ் 100 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், செனல் 4 ஊடாக வெளியான விடயங்கள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, 12 சிவில் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 பொலிஸ் அதிகாரிகள், 3 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...