Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?’

T

The Leader Desk

ஜனவரி 7, 2025 • 4:40 AM

‘சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
  • அவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள், மக்களை வதைத்தவர்கள் மற்றும் மக்களைப் படுகொலை செய்தவர்கள் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.
எழுத்து அளவு:

அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?" என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள், மக்களை வதைத்தவர்கள் மற்றும் மக்களைப் படுகொலை செய்தவர்கள் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக அநுர அரசு ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை?

வாக்குமூலம் என்ற பெயரில் ஒருசிலர் மாத்திரம் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களும் வெளியில் வந்து வீரவசனம் பேசிக்கொண்டு திரிகின்றார்கள்.

ஊழல், மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், மோசடியாளர்களையும், கொலையாளிகளையும் சிறையில் அடைப்போம் என்று தேர்தல் காலங்களில் மக்கள் முன்னிலையில் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த அநுர தரப்பினர்,

குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? அவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

இதேவேளை, இது விடயத்தில் பதிலளித்துள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது என்றும், அவர்கள் தப்பித்து ஓடவும் முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

“குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே, அவசரப்பட வேண்டாம், சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது. அவர்கள் தப்பித்து ஓடவும் முடியாது. குற்றங்கள் இழைத்தவர்கள் தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்க முடியாது” என்று, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?’ | Tamil Leader | We Lead the Nation