Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

T

The Leader Desk

ஜனவரி 6, 2025 • 3:54 AM

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
  • இதேவேளை அநுராதபுரம் - மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள திறப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே மழையின் தாக்கத்தால் மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
எழுத்து அளவு:

மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே மழையின் தாக்கத்தால் மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் கெப்பெட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை அநுராதபுரம் - மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள திறப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று அங்கு விஜயம் மேற்கொண்ட போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார மத்திய நிலையத்தை மீள திறக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சருக்கு இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...