Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் செய்ய அரிசிக்கு தட்டுப்பாடு

T

The Leader Desk

ஜனவரி 6, 2025 • 3:48 AM

தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் செய்ய அரிசிக்கு தட்டுப்பாடு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துடன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்தை அடுத்து, இதுவரையில் 88,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
  • இவ்வாறான பின்னணியில், தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
  • எனினும் கடந்த பண்டிகை காலத்தைப் போலவே தற்போதும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

அதனைக் கொண்டாட முடியாத வகையில் தற்போது சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்தல், அரிசியை இறக்குமதி செய்தல் மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது.

அத்துடன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்தை அடுத்து, இதுவரையில் 88,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் கடந்த பண்டிகை காலத்தைப் போலவே தற்போதும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில், தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அரிசி விற்பனையிலிருந்து விலகியிருப்பதற்கு கொட்டகலை - ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் செய்ய அரிசிக்கு தட்டுப்பாடு | Tamil Leader | We Lead the Nation