Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மீது கரிசனை

T

The Leader Desk

ஜனவரி 6, 2025 • 3:46 AM

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மீது கரிசனை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
  • குறித்த குடையை அணிவதன் மூலம்.
  • ஒரு குடையின் விலை 1600 ரூபாய் என்று கூறப்பட்டாலும், தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் இதன் மூலம் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு வெயிலிலும், மழையிலும் பாதிப்பின்றி இலகுவாக தேயிலை கொழுந்து பறிப்பதற்காக இந்த குடை அறிமுகம் செய்யப்பட்டதாக தோட்ட அத்தியட்சகர் நதீர குணசேகர தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் இணைந்து முன்னோடி திட்டமாக இந்த குடை உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த குடையை அணிவதன் மூலம். தேயிலை இலைகளை பறிப்பது எளிது என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு குடையின் விலை 1600 ரூபாய் என்று கூறப்பட்டாலும், தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் இதன் மூலம் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் மூலம், தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய குடைக்கான காப்புரிமையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தோட்ட அத்தியட்சகர் நதீர குணசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மீது கரிசனை | Tamil Leader | We Lead the Nation