Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வெலிகம துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

T

The Leader Desk

ஜனவரி 4, 2025 • 1:08 PM

வெலிகம துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சூட்டு சம்பவத்திற்கு மாத்தறை உணவகம் ஒன்றில் இடம்பெற்ற DJ விருந்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
  • இதேவேளை, மாத்தறை, வெலிகமவில் இன்று (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வருகைதந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மாத்தறை சிறைச்சாயைில் மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட துர்க்கி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று (03) இரவு ஐவர் குழு சென்றுள்ளது.
  • இந்நிலையில், இன்று (04) அதிகாலை ஒரு மணியளவில் குறித்த குழுவினர் கால்நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெலிகம, கப்பரதொட்ட, வள்ளிவெல வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

சூட்டு சம்பவத்திற்கு மாத்தறை உணவகம் ஒன்றில் இடம்பெற்ற DJ விருந்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

இந்த கொலையில் ஹரக் கட்டாவின் தரப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட இளைஞன் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாத்தறை, வெலிகமவில் இன்று (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வருகைதந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் வெலிகம, மூனமல்பே பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை சிறைச்சாயைில் மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட துர்க்கி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று (03) இரவு ஐவர் குழு சென்றுள்ளது.

இந்நிலையில், இன்று (04) அதிகாலை ஒரு மணியளவில் குறித்த குழுவினர் கால்நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெலிகம, கப்பரதொட்ட, வள்ளிவெல வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் ரிவோல்வர் மற்றும் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், ஐவரில் இருவர் காயமடைந்ததோடு, இருவரும் மாத்தறை வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கப்பரதொட்ட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆகாஷ் தருக என்பவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்த இளைஞன் 29 வயதான செஹான் துலாஞ்சல எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...