Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியால் குழப்பம்!

T

The Leader Desk

டிசம்பர் 26, 2024 • 10:21 AM

கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியால் குழப்பம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
  • அத்துடன், சகாதேவனை பார்த்து, "உங்களுடன் திருப்பி கதைத்ததற்காக ஒரு நாளில் 8 அல்லது 10 பேரை இடமாற்றம் செய்துள்ளீர்கள்.
  • ஆகையால் அடுத்த முறை முயற்சியுங்கள்.
எழுத்து அளவு:

அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதன்போது, அர்ச்சுனாவை பார்த்து சகாதேவன், ‘பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல், நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள்” என்று கூறினார். அதைக் கேட்டதும் கோபமடைந்த அர்ச்சுனா எம்.பி, “shut up” (வாயை மூடுங்கள்) என்று கூறினார்.

இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, “ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். Shut up என்று எல்லாம் கூற முடியாது. இங்கே அதிகாரிகள் தான் உள்ளார்கள்” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி, “ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது குறுக்கிடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா?” என்று கூறிவிட்டு, தம்பிராசாவை பார்த்து "can you shut up" (உங்களது வாயை மூட முடியுமா?” என்றார்.

அத்துடன், சகாதேவனை பார்த்து, "உங்களுடன் திருப்பி கதைத்ததற்காக ஒரு நாளில் 8 அல்லது 10 பேரை இடமாற்றம் செய்துள்ளீர்கள். இதனை உங்களது கட்சியோடு வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட தம்பிராசா, “ஒரு அரச அதிகாரியை பொது வெளியில் வைத்து அவமானப்படுத்த கூடாது. இடமாற்றம் பெற்றவர்கள், வேண்டும் என்றால் அமைச்சுக்கு முறையிடலாம்” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி, "நீங்கள் எந்த கட்சி? உங்களுக்கு கிடைக்கவில்லை தானே nomination. ஆகையால் அடுத்த முறை முயற்சியுங்கள். தயவு செய்து தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள். ஒரு பொம்பிளை பிள்ளையை பற்றி முகநூலில் எவ்வளவு எழுதுகின்றீர்கள். வெளியே போம்” என்றார்.

அதற்கு பதிலளித்த தம்பிராசா, "நீங்கள் இரவு பகலாக ஒரு பொம்பிளையை கொண்டு திரிகிறீர்கள்” என்றார்.

அதற்கு பதிலளித்த அர்ச்சுனா, "நான் ஒன்றைத்தான் கொண்டு திரிகிறேன். நீங்கள் எத்தனையை கொண்டுபோய் வெளிநாடுகளில் கொடுத்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும். எதற்காக இவரை அழைக்கின்றீர்கள். இவர் ஒரு அழையா நபர். ஆகையால் வெளியே செல்லுங்கள். அமைச்சர் அவர்களே, ஒரு அழையா நபரை உள்ளே விட்டு ஏன் பிரச்சினையை உருவாக்குகின்றீர்கள். இவர் யார்? என்ன அடிப்படையில் உள்ளே வந்தார்” என்றார்.

அதற்கு பதிலளித்த யாழ்-கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான சந்திரசேகர், “இனிமேல் பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ அனுமதி இல்லை. பொதுமக்கள் முறையிட வேண்டுமாக இருந்தால், நாங்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உள்ளோம், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களிடம் முறையிடுங்கள்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியால் குழப்பம்! | Tamil Leader | We Lead the Nation