Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘ஜனாதிபதி நிதியத்தின் பணம் உரிய நிர்வாக நடைமுறையில்தான் வழங்கப்பட்டது’

T

The Leader Desk

டிசம்பர் 22, 2024 • 9:29 AM

‘ஜனாதிபதி நிதியத்தின் பணம் உரிய நிர்வாக நடைமுறையில்தான் வழங்கப்பட்டது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான நிர்வாக நடைமுறைகளின் கீழ் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.
  • அவர்களில் ஒருவரை தவிர, எவரும் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியைப் பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
  • இதன்படி, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவபிரிய பெரேராவின் இருதய அறுவை சிகிச்சைக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கொங்கஹகேவின் இருதய அறுவை சிகிச்சைக்கு 500,000 ரூபாய்கள் வழங்கப்பட்டன அதேநேரம் கேட்கும் கருவிகளை பெறுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி.
எழுத்து அளவு:

மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான நிர்வாக நடைமுறைகளின் கீழ் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர்களில் ஒருவரை தவிர, எவரும் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியைப் பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், குறித்த அறிக்கையில் தமது பதவிக் காலகட்டத்தில் செய்யப்பட்ட பல குறிப்பிடத்தக்க கொடுப்பனவுகளையும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவபிரிய பெரேராவின் இருதய அறுவை சிகிச்சைக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கொங்கஹகேவின் இருதய அறுவை சிகிச்சைக்கு 500,000 ரூபாய்கள் வழங்கப்பட்டன அதேநேரம் கேட்கும் கருவிகளை பெறுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி. முத்துக்குமாரானாவுக்கு 400,000 ரூபாய்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ. ஜகத் குமாரவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதுடன், மூத்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு சத்திரசிகிச்சைக்காக 5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், மருத்துவ சிகிச்சைகளுக்காக ஜனாதிபதி நிதியம் 100 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான நிதி உதவியை வழங்கியுள்ளது.

இதில் நோயாளிகள், விண்ணப்பதாரர்கள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களுக்கான உதவிகளும் அடங்கியிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...