Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்பலாம்: இந்திய அதிகாரி

T

The Leader Desk

ஜனவரி 31, 2024 • 3:43 AM

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்பலாம்: இந்திய அதிகாரி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தூதரக அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
  • அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த விடயம் சரிவரும்.
  • இது தொடர்பில் சிறீதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிலுள்ள சிறப்பு முகாமில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியுடன் பேசினேன்.
எழுத்து அளவு:

தூதரக அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிறீதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிலுள்ள சிறப்பு முகாமில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில்  வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியுடன் பேசினேன்.

“சாந்தன் இலங்கை திரும்பி வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைத் தூதரான வெங்கட் அவர்களோடு பேசப்பட்டுள்ளது. அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த விடயம் சரிவரும். அத்தோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்தில் அந்த விடயம் சாத்தியமாகும் என தெரிவித்தார்.

“மேலும் சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைதூதுவருடனும் நான் தொலைபேசியில் பேசினேன்.  பாதுகாப்பு அமைச்சினுடைய சில உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதாகவும் உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

“இந்திய தூதரகத்தால் ஆவணங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரி தெரிவித்தார்” என்று, சிறிதரன் எம்.பி மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...