Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வடக்கு மக்களை தம் பக்கம் இழுக்கும் முறை தொடர்பில் படையினருக்கு விளக்கிய ஜேவிபி

T

The Leader Desk

ஜனவரி 30, 2024 • 10:05 AM

வடக்கு மக்களை தம் பக்கம் இழுக்கும் முறை தொடர்பில் படையினருக்கு விளக்கிய ஜேவிபி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்றாகப் பயணிப்பதன் மூலமே தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமென்றே அம்மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால், முப்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
  • “13ஐ தருகிறோம் என்று கூறி, வடக்கு மக்களுக்கு அழைப்புவிடுக்க முடியாது.
  • முதல், மொழிப் பிரச்சினை எழுப்பப்பட்டது, 1958இல், சிங்கள மற்றும் தமிழ் கொந்தளிப்பு ஏற்பட்டது.
  • ஸ்ரீ எழுத்துக்கு கிறீஸ் ஊற்ற ஆரம்பித்தார்கள்.
எழுத்து அளவு:

அழைக்க முடியாது. ஒன்றாகப் பயணிப்பதன் மூலமே தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமென்றே அம்மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால், முப்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

“13ஐ தருகிறோம் என்று கூறி, வடக்கு மக்களுக்கு அழைப்புவிடுக்க முடியாது. ஃபெடரல் முறைத் தீர்வைத் தருகிறோம் என்று கூறியும் அவர்களை அழைக்க முடியாது. தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகளிலிருந்து மீளவேண்டுமாயின், நாம் ஒன்றாகப் பயணிக்க வேண்டுமென்று கூறியே அம்மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்” என்று, மாத்தறையில் இடம்பெற்ற முப்படை அதிகாரிகளுடனான மாநாடொன்றின் போது, அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஆட்சியாளர்கள் தேசிய ஒற்றுமையை உருவாக்கி, தேசம் ஒன்றுபட்டு நிற்கும் வரலாற்றை எழுதிய போது இந்நாட்டு மக்கள் முரண்பட்ட வரலாற்றை எழுத நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது, ​​தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க திரு.செல்வநாயகம் முன்வந்தார். 1956 முதல், மொழிப் பிரச்சினை எழுப்பப்பட்டது, 1958இல், சிங்கள மற்றும் தமிழ் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஸ்ரீ எழுத்துக்கு கிறீஸ் ஊற்ற ஆரம்பித்தார்கள். 1970ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், வடக்கில் ஒரு ஆயுத இயக்கம் தொடங்குகிறது. 2009 போர் முடிவடைந்தாலும், 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடங்கப்பட்டது. நமது ஆட்சியாளர்கள் மோதல் வரலாற்றை உருவாக்கினர், ஆனால் இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஒரு ஒற்றுமையை உருவாக்கினர். தேசம் ஒன்றாக நிற்கும் வரலாற்றை அவர்கள் எழுதும்போது, ​​நாம் முரண்பட்ட வரலாற்றை எழுதவேண்டி ஏற்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில் உலக நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அனுரகுமார திஸாநாயக்க, உலகின் நவீனத்துவத்திற்கு ஏற்ப இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்காக, வெறும் ஆட்சி மாற்றத்திற்குப் பதிலாக, நாட்டை மாற்றும் புதிய சகாப்தத்திற்கு இட்டுச் செல்லும் புதிய நிர்வாகம், அதற்காக, தேசம் மீண்டும் எழுச்சி பெற்று, தேசம் ஒற்றுமைக்கு செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

புதிய மறுமலர்ச்சி யுகத்துக்கான அதிகாரத்தை மக்கள் சக்தி கையில் எடுக்க வேண்டும் என்றும் அதன் பின்னரே பிரச்சினைக்கான தீர்வு ஆரம்பமாகுமே தவிர முடிவு அல்ல என்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...