Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

புதிய வரியொன்று தொடர்பில் தகவல்

T

The Leader Desk

ஜனவரி 29, 2024 • 1:04 PM

புதிய வரியொன்று தொடர்பில் தகவல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
  • எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
  • “இந்த சொத்து வரியானது நேரடியான வரியாவே உள்ளது.
  • அத்தோடு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் டின் இலக்கம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எழுத்து அளவு:

சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அதற்காக மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவில்லை. வரிகளை அதிகரிக்கும் நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை.

“பொருட்களின் கேள்விகள் மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே அவற்றின் விலைகள் தீர்மானிக்கப்படும். எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

“இந்த சொத்து வரியானது நேரடியான வரியாவே உள்ளது. பெரிய சொத்துக்கள் இருக்கும் நபர்களிடம் இருந்து இந்த சொத்து வரி அறவிடப்படும். அத்தோடு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் டின் இலக்கம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

“ஆனால் இதில் பல பிரச்சனைகளை இனங்கண்டுள்ளோம். உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சில தொழில்நுட்ப சாதனங்கள் இல்லை. கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நீண்ட மீளாய்வுக் கூட்டத்தின் போது, இந்தப் பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

“குறிப்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குதல், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டதாரிகளை பணியமர்த்துதல் உள்ளிட்ட பல தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...