Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஆபத்தான நிலையில் சாந்தன்: பருத்தித்துறையிலுள்ள தாயைப் பார்க்கக் கோரிக்கை

T

The Leader Desk

ஜனவரி 28, 2024 • 6:12 AM

ஆபத்தான நிலையில் சாந்தன்: பருத்தித்துறையிலுள்ள தாயைப் பார்க்கக் கோரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையில், சென்னை ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • பருத்தித்துறையில் உள்ள சாந்தனின் தாயார் முதுமையின் இறுதித் தருணத்தில் நாட்களை எண்ணிக்கொண்டு சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனை காண காத்திருப்பதாக வழக்கறிஞர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
  • அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சாந்தன் தற்போது முதுமை நிலைக்கு சென்றுள்ளதாகவும் 50களில் உள்ள மனிதன் தற்போது 80 களில் இருப்பவர்கள் போல் தோற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நிலையில், சென்னை ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ். பருத்தித்துறையில் உள்ள சாந்தனின் தாயார் முதுமையின் இறுதித் தருணத்தில் நாட்களை எண்ணிக்கொண்டு சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனை காண காத்திருப்பதாக வழக்கறிஞர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சாந்தன் தற்போது முதுமை நிலைக்கு சென்றுள்ளதாகவும் 50களில் உள்ள மனிதன் தற்போது 80 களில் இருப்பவர்கள் போல் தோற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கல்லீரல், சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளான சாந்தனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் மோசமான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், “நான் எனது சொந்த நாட்டுக்கு சென்று விடுகிறேன், எனது தாயாரை பார்க்க விரும்புகிறேன்” என்ற ஒரே ஒரு கோரிக்கையை மாத்திரமே சாந்தன் முன்வைத்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஜான்சன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில் மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகரித்ததால் திருச்சியில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கல்லீரல் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளான சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...