Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சனத் நிஷாந்தவின் இறுதித் தருணங்கள்…

T

The Leader Desk

ஜனவரி 25, 2024 • 8:45 AM

சனத் நிஷாந்தவின் இறுதித் தருணங்கள்…   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிரிழப்பதற்கு முன்னர் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
  • கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்திருந்தது.
  • இந்நிலையில், சனத் நிஷாந்த இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
  • பேஸ்புக் பக்கம் ஒன்றினால் வெளியிடப்பட்ட வீடியோ காணொளி ஒன்றையே அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
எழுத்து அளவு:

உயிரிழப்பதற்கு முன்னர் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

சமூக ஊடக செயற்பட்டாளர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமணமான மனமகன் இது தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டு தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

“மாமா சனத் நிஷாந்தவுக்கு என்ன நடந்தது என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. எனக்காக…. என்னைப் பார்க்க வந்த பயணத்தில்.இந்த சம்பவம் நடந்தது என்பதனை நான் எப்படி தாங்கிக் கொள்வேன். ஆத்மா சாந்தி அடையட்டும் மாமா” உன அவர் பதிவிட்டுள்ளார்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சனத் நிஷாந்த இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

பேஸ்புக் பக்கம் ஒன்றினால் வெளியிடப்பட்ட வீடியோ காணொளி ஒன்றையே அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

"வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்" என்று அந்த வீடியோ பதிவு அமைந்துள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்துக்குக் காரணமான பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப், முன்னால் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி பின்னர் வீதியின் அருகில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில், விபத்து தொடர்பில் கொள்கலன் பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜீப் வண்டி சாரதி தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், தற்போது இராஜாங்க அமைச்சர் உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள் என பலரும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...