Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இசைஞானி இளையராஜா உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வந்தனர்

T

The Leader Desk

ஜனவரி 25, 2024 • 1:06 AM

இசைஞானி இளையராஜா உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வந்தனர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாடகர்கள் அடங்கிய குழுவினர், நேற்றைய தினம் (24) மாலை இலங்கையை வந்தடைந்தனர்.
  • இவருடன் தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினரும் நேற்று (24) மாலை இலங்கையை வந்தடைந்தனர்.
  • கொழும்பில் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறும் 'இளையராஜா Live in concert' பங்குபற்றுவதற்காகவே இளையராஜா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
  • இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பாடகர்கள் அடங்கிய குழுவினர், நேற்றைய தினம் (24)  மாலை இலங்கையை வந்தடைந்தனர்.

இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இசைஞானி இளையராஜா, தான் இசையமைத்த பாடலைக் கேட்காத தமிழர்கள் இலங்கையிலும் உலகிலும் இல்லை என்றார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே, இளையராஜா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா “நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இவருடன் தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினரும் நேற்று (24) மாலை இலங்கையை வந்தடைந்தனர்.

கொழும்பில் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறும் 'இளையராஜா Live in concert' பங்குபற்றுவதற்காகவே இளையராஜா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,”நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்.எங்கு சென்றாலும் என்னிசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது. இலங்கை தமிழர்களில் எனக்கு இரசிகரில்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே.அதுவே எனக்கு போதும். இது கடவுள் கொடுத்த வரம்” என கூறியுள்ளார்.

மேலும் இவரின் இசை நிகழ்ச்சியில் பாடகர் மனோ, பாடகர் மது பாக்கிருஷ்ணன், பாடகி விபாவரி, பாடகி ஸ்வேதா மோகன், பாடகி ஸ்ரீஷா விஜயசேகர், பாடகி அனிதா கார்த்திகேயன், பாடகி சுர்முகி ராமன், பாடகி பிரியா ஹிமேஷ் மற்றும் பாடகர் S. P.சரண் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...