Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

லெனின் பற்றிப் பேசிப் பயனில்லை: வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜே.வி.பிக்கு ரவி ஆலோசனை

T

The Leader Desk

ஜனவரி 25, 2024 • 12:50 AM

லெனின் பற்றிப் பேசிப் பயனில்லை: வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜே.வி.பிக்கு ரவி ஆலோசனை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேசுவதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • வி.ஐ.லெனின் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை.
  • ஜே.வி.பிக்கு பேச மட்டுமே தெரிகிறது என்றும் அவற்றால் எந்தப் பயனுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

பேசுவதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பிக்கு பேச மட்டுமே தெரிகிறது என்றும் அவற்றால் எந்தப் பயனுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி, “மக்கள் விடுதலை முன்னணியினர், வாய்ப்பேச்சில் மாத்திரம்தான் வீரர்களாகக் காணப்படுகின்றனர். அதனால் எந்தப் பயனுமில்லை. இலக்கை அடைவதற்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். அது இலகுவான விடயமல்ல. வி.ஐ.லெனின் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர்கள் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டத்தை ஜே.வி.பியினர் முன்வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாடு வீழ்ச்சியடைவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ காரணமல்ல என்றும் குறிப்பிட்டுள்ள ரவி கருணாநாயக்க, அனைவரிடத்திலும் தவறு இருக்கிறதென்றும் நாட்டைக் கட்டியெழுப்பி, மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், சரியான பொருளாதாரக் கொள்கையொன்று அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர், ரவி கருணாநாயக்க, வட் வரியின் இலாபம், மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சரியான பாதையில் கொண்டுசெல்லும் ஜனாதிபதி, வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றாரென்றும், அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

லெனின் பற்றிப் பேசிப் பயனில்லை: வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜே.வி.பிக்கு ரவி ஆலோசனை | Tamil Leader | We Lead the Nation