Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தத் தயார்’

T

The Leader Desk

ஜனவரி 24, 2024 • 5:54 AM

‘வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தத் தயார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனவே, மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் நேரில் தெரிவித்தார்.
  • இச்சந்திப்பு, நேற்று (23) பிற்பகல் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
  • இது தொடர்பில் அனுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
எழுத்து அளவு:

விரும்புகின்றார்கள். எனவே, மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் நேரில் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு, நேற்று (23) பிற்பகல் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பில் அனுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இலங்கையின் நடப்பு அரசியல் நிலைவரங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Anura_2.jpeg

 

Anura_3.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தத் தயார்’ | Tamil Leader | We Lead the Nation