Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘போதைப்பொருள் வலையமைப்புக்கு முடிவுகட்டும் வரை யுக்திய நடவடிக்கை தொடரும்’

T

The Leader Desk

ஜனவரி 23, 2024 • 1:27 PM

‘போதைப்பொருள் வலையமைப்புக்கு முடிவுகட்டும் வரை யுக்திய நடவடிக்கை தொடரும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வலையமைப்புக்கு முடிவுகட்டும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சூளுரைத்துள்ளார்.
  • போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்களிடம் பணம் வாங்கும் தரப்புக்களே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன யுக்திய நடவடிக்கையை நிறுத்து வதற்குச் சில மதத்தலைவர்கள் முற்படுகின்றனர்.
  • இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “யுக்திய செயல் திட்டத்தின் முதல் மாத நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.
எழுத்து அளவு:

வலையமைப்புக்கு முடிவுகட்டும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“யுக்திய செயல் திட்டத்தின் முதல் மாத நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. எனினும், யுக்திய நடவடிக்கையை முன்னெடுக்கும்போது பல தடைகளும் வருகின்றன, சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் வருகின்றன, நாட்டுக்கு எதிராகச் செயற்படும் சில குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்களும் எதிர்க்கின்றன. எமக்கு எதிராகச் செயற்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் தொடரும்.

“சேறுபூசுகின்றன. போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்களிடம் பணம் வாங்கும் தரப்புக்களே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன யுக்திய நடவடிக்கையை நிறுத்து வதற்குச் சில மதத்தலைவர்கள் முற்படுகின்றனர். சில சட்டத்தரணிகளும் தொடர்புபட்டுள்ளனர். அரசியல் கட்சிகளில் உள்ள சிலரும் தொடர்புபட்டுள்ளனர்.

“அத்துடன் யுக்திய நடவடிக்கை என் பது ஊடக கண்காட்சி, நாடகம் என்றெல்லாம்கூட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

“அது பற்றி நாம் அலட்டிக்கொள்வதில்லை, போதைப்பொருள் வலையமைப்புக்கு முடிவு கட்டும் வரை எமது பணி தொடரும். ஒரு அடிகூடப் பின்வாங்கமாட்டோம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...