Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘மாகணசபை தேர்தலை நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்’; தமிழ்க் கட்சிகள் கோரிக்கை

T

The Leader Desk

ஜனவரி 23, 2024 • 7:00 AM

‘மாகணசபை தேர்தலை நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்’; தமிழ்க் கட்சிகள் கோரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இதேவேளை இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
  • இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் நேற்றையதினம்(22) இரண்டு மணிநேரம் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
எழுத்து அளவு:

என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் நேற்றையதினம்(22) இரண்டு மணிநேரம் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் தூதரகத்தின் அழைப்புக்கிணங்க இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவில்லை.

இம் மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளாமைக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...