Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஸ்ரீதரனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

T

The Leader Desk

ஜனவரி 23, 2024 • 6:45 AM

ஸ்ரீதரனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் நேற்று முன்தினம் (21) தெரிவு செய்யப்பட்டார்.
  • இதன்படி வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 184 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
எழுத்து அளவு:

விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அணிசேரா மாநாட்டுக்காக உகாண்டா சென்றுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் நேற்று முன்தினம் (21) தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.

இதன்படி வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 184 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

மேலும், வரலாற்றில் முதற்தடவையாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஒருவர் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவை ஆகும்.

அதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஸ்ரீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...