Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி பயணத்தை ஆரம்பித்தார் சிறீதரன்

T

The Leader Desk

ஜனவரி 22, 2024 • 3:56 AM

மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி பயணத்தை ஆரம்பித்தார் சிறீதரன்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாலை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.
  • இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 74 வருட வரலாற்றில் முதல் முறையாக தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.
  • சிறீதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவாக 137 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
எழுத்து அளவு:

மாலை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

இதன்போது மாவீரர்களின் நினைவுத் தூபிக்கு அவர் கார்த்திகை மலர் வைத்து பூஜித்ததுடன், அஞ்சலியும் செலுத்தினார்.

'ஈழத் தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புக்களை உணர்ந்து, கொள்கை ரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம்மிக்க பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஆரம்பிக்கின்றேன்' - வணக்க நிகழ்வின்போது சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.

அதன்பின்னர் கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்கும் நிகழ்விலும், விசேட பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 74 வருட வரலாற்றில் முதல் முறையாக தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

சிறீதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவாக 137 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் தமிழரசுக் கட்சியின் மாநாட்டின்போது, சிறிதரன் தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்வார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...