Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஜனாதிபதியுடன் உகண்டா சென்ற சஜித், டலஸ், விமலின் எம்.பிக்கள்

T

The Leader Desk

ஜனவரி 21, 2024 • 10:47 AM

ஜனாதிபதியுடன் உகண்டா சென்ற சஜித், டலஸ், விமலின் எம்.பிக்கள்              

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விக்கிரமசிங்க, ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள குளோபல் தெற்கில் உள்ள நாடுகளின் பல தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
  • விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிச் செயலாளராகவும் உள்ளார்.
  • கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகாந்த குணதிலக்க, மொட்டுவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 10ஆம் திகதி 'மனசாட்சியின் பத்து பேர் கொண்ட குழு' என அறிவித்து ஆளும் கட்சியிலிருந்து வெளியேறியவராவார்.
எழுத்து அளவு:

விக்கிரமசிங்க, ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள குளோபல் தெற்கில் உள்ள நாடுகளின் பல தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கும் இடையிலான சந்திப்பில், அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் கலந்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோர், இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கிங்ஸ் நெல்சன் எம்.பி, பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ, மொட்டுக் கட்சியைப் பிரதிநிதித்தி, நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவராவார். விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிச் செயலாளராகவும் உள்ளார்.

உகண்டா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க, மொனராகலை மாவட்டத்தில் இருந்து மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகாந்த குணதிலக்க, மொட்டுவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 10ஆம் திகதி 'மனசாட்சியின் பத்து பேர் கொண்ட குழு' என அறிவித்து ஆளும் கட்சியிலிருந்து வெளியேறியவராவார். அத்துடன், நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக டலஸ் அழகப்பெரும எம்.பிக்கு ஆதரவளித்து வாக்கெடுப்பில் கலந்துகொண்டவராவார்.

uganda_1_1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...