Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அடுத்த இரு வருடங்களின் பின்னர் தமிழரசின் தலைமையைப் பெறுவதற்குத் தந்திரத் திட்டம்

T

The Leader Desk

ஜனவரி 20, 2024 • 2:02 PM

அடுத்த இரு வருடங்களின் பின்னர் தமிழரசின் தலைமையைப் பெறுவதற்குத் தந்திரத் திட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒருவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகவுள்ளார் என்றும், இந்த வாபஸ் அறிவிப்பு மூலம் அடுத்த இரண்டு வருடங்களின் பின்னர் தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற உறுதி மொழியை அவர் பெற்றுக்கொள்ளத் திட்டம் போட்டுள்ளார் என்றும் தெரிய வருகின்றது.
  • இந்நிலையில், இந்தத் தேர்தலில் தோல்வி தனக்கு நிச்சயம் என்று கருதும் வேட்பாளர் ஒருவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.
  • இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
எழுத்து அளவு:

ஒருவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகவுள்ளார் என்றும், இந்த வாபஸ் அறிவிப்பு மூலம் அடுத்த இரண்டு வருடங்களின் பின்னர் தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற உறுதி மொழியை அவர் பெற்றுக்கொள்ளத் திட்டம் போட்டுள்ளார் என்றும் தெரிய வருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய தலைவரைத் தேர்வு செய்யவுள்ளனர்.

 இந்நிலையில், இந்தத் தேர்தலில் தோல்வி தனக்கு நிச்சயம் என்று கருதும் வேட்பாளர் ஒருவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. தனக்கு ஏற்படும் தோல்வியைத் தவிர்ப்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுக்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அதன்மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களின் பின்னர் அடுத்த தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற உறுதி மொழியை மேற்படி வாபஸ் அறிவிப்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அவர் திட்டம் போட்டுள்ளார் என்றும் தெரிய வருகின்றது.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா தான் நினைத்தவாறு, கட்சியின் பொதுச் சபையில் அங்கம் வகிக்காத இளைஞர், யுவதிகள் பலரை நாளை நடைபெறவுள்ள புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது.

மாவை சேனாதிராஜாவின் இந்தத் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறிய செயல் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...