Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இலங்கை அரசாங்கத்தால் நடிகர் விஜய்க்கு ஆபத்தென்ற செய்தியால் பரபரப்பு

T

The Leader Desk

ஜனவரி 19, 2024 • 6:36 AM

இலங்கை அரசாங்கத்தால் நடிகர் விஜய்க்கு ஆபத்தென்ற செய்தியால் பரபரப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த செய்தியானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • நாங்களும், ஈழத் தமிழர்களும் நெருக்கமாக இருக்கிறோம் என்ற போலி உணர்வை உலகத்திடம் உணர்த்த முத்தையா முரளிதரனை வைத்தே இதனை ஏற்பாடு செய்திருக்கிறது.
  • அதனால்தான் அவரது படங்கள் 200 கோடி ரூபாவை அசால்ட்டாக வசூலிக்கின்றது.
எழுத்து அளவு:

சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த செய்தியானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான படிப்பிடிப்பு இலங்கையில் நடக்கவுள்ள நிலையில் விஜய்க்கு இலங்கையால் ஆபத்து வந்துவிட்டதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில்,

“எனக்கு ஒரு நண்பர் வீடியோ அனுப்பி வைத்து விஜய்க்கு இலங்கையில் ஆபத்து இருப்பதாக கூறினார். என்னவென்று விசாரித்து பார்த்தால், ஜீ தமிழில் நடந்த ரியாலிட்டி ஷோவான சரிகவில் இலங்கைச் சிறுமி கில்மிஷா என்பவர் பாடல் பாடி முதல் பரிசை வென்று சென்றார். அவர் இலங்கைக்கு சென்றதும் அவருடன் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்டோர் எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

“அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்ன வென்றால், எங்கள் நாட்டில் ஈழ மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, நாங்கள் சுமுகமாகத்தான் இருக்கிறோம் என்பதைத் தான். ஆனால் உண்மை நிலைவரம் அப்படி இல்லை.

“இந்த சூசகமான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருவதாக இருந்தார்.

“ஆனால் தமிழர்கள் அதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தோம். இதனையடுத்து அந்த முடிவை அவர் கைவிட்டார். அவரும் முத்தையா முரளிதரனும் நெருங்கிய நண்பர்கள். நாங்களும், ஈழத் தமிழர்களும் நெருக்கமாக இருக்கிறோம் என்ற போலி உணர்வை உலகத்திடம் உணர்த்த முத்தையா முரளிதரனை வைத்தே இதனை ஏற்பாடு செய்திருக்கிறது.

“இப்போது விஜய்யை அழைத்துக்கொண்டு வெங்கட் பிரபு இலங்கைக்கு வந்து GOAT படப்பிடிப்பை நடத்துவதாகவும் முக்கியமாக தமிழர்கள் இருக்கும் பகுதியில் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“இது படப்பிடிப்பின்போது நின்றால் பரவாயில்லை. மாறாக விஜய்யுடன் இலங்கை அரசை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வேலை நடக்கும். அது முத்தையா முரளிதரன் மூலமாகக்கூட நடக்கலாம். இன்று உலகம் முழுவதும் விஜய்க்கு மார்க்கெட் இருக்கிறது.

“அதனால்தான் அவரது படங்கள் இன்று உலகம் முழுவதும் விஜய்க்கு மார்க்கெட் இருக்கிறது. அதனால்தான் அவரது படங்கள் 200 கோடி ரூபாவை அசால்ட்டாக வசூலிக்கின்றது.

“அதுமட்டுமின்றி அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்திலும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இலங்கை அரச தரப்பினர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அது வெளியானால் ஈழத் தமிழர்களை பகைத்துக்கொள்ளும்படி ஆகிவிடும். மேலும் அவரது அரசியல் வருகைக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம். இப்படி அவருக்கு ஆபத்து இருக்கிறது. ஈழ இதனை வெங்கட் பிரபுவே ஏற் படுத்திக்கொடுக்கிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை அரசாங்கத்தால் நடிகர் விஜய்க்கு ஆபத்தென்ற செய்தியால் பரபரப்பு | Tamil Leader | We Lead the Nation