Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

T

The Leader Desk

ஜனவரி 17, 2024 • 9:45 AM

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சில்வாவை மன்னித்து விடுதலை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்திருந்த தீர்மானத்தை, உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 17) செல்லுபடியற்றதாக அறிவித்து தீர்ப்பளித்தது.
  • மனுதாரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்துள்ள உண்மைகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எழுத்து அளவு:

சில்வாவை மன்னித்து விடுதலை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்திருந்த தீர்மானத்தை, உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 17) செல்லுபடியற்றதாக அறிவித்து தீர்ப்பளித்தது.

இதன்படி, துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை செய்ததன் பின்னர், நீதியரசர்களான காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என தீர்ப்பை அறிவித்த நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில், மக்களின் நம்பிக்கையை மீறும் வகையில் முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மனுதாரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்துள்ள உண்மைகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையான நீதிபதிகள் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

இந்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ததுடன், துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யுமாறு மேன்முறையீட்டு மனுக்களை விசாரணை செய்த ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதில் முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் அதன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரி, சுமனா பிரேமச்சந்திர, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...