Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

கூட்டுக்குள் குழப்பம்…

T

The Leader Desk

ஜனவரி 17, 2024 • 3:29 AM

கூட்டுக்குள் குழப்பம்…   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸஇ மொட்டுக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்இ கலாநிதி நாலக்க கொடஹேவா போன்றோரை தமது அணியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
  • அவரைக் கட்சிக்குள் உள்வாங்குவதை இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கு ஆதரவாக பொருளாதார விடயங்களை எடுத்துரைத்துப் பிரசாரப்படுத்தி வந்த கலாநிதி ஹர்ஷா டி சில்வா, இரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் போன்றோர் கடுமையாக எதிர்கின்றனர்.
  • இந்த வரிசையில் பேராசிரியர் சன்ன ஜயசுமணவும் சஜித் பக்கம் விரைவில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸஇ மொட்டுக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்இ கலாநிதி நாலக்க கொடஹேவா போன்றோரை தமது அணியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

இந்த வரிசையில் பேராசிரியர் சன்ன ஜயசுமணவும் சஜித் பக்கம் விரைவில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 ந்த இணைப்பு ஐக்கிய மக்கள் சக்திக்குள் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. மேற்படி மூவரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவுக்கு, அவரது ஆட்சிக் காலத்தில் 'கயிறு' கொடுத்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

கோட்டாபயவை பொருளாதார துறையில் தவறாக வழிநடத்தியவர் கலாநிதி நாலக கொடஹேவா எனக் கருதப்படுகின்றது. அவரைக் கட்சிக்குள் உள்வாங்குவதை இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கு ஆதரவாக பொருளாதார விடயங்களை எடுத்துரைத்துப் பிரசாரப்படுத்தி வந்த கலாநிதி ஹர்ஷா டி சில்வா, இரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் போன்றோர் கடுமையாக எதிர்கின்றனர்.

கொவிட் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைக்கும் படியான தீவிர நிலைப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்தமைக்கு பின்னால் இருந்த முக்கிய சூத்திரதாரி சன்ன ஜயசுமண என்று கூறப்படுகின்றது.

அவரை ஐக்கிய மக்கள் சக்தி அணியின் கூட்டணிக்குள் உள்வாங்குவதை அந்தக் கூட்டணியில் உள்ள ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கட்சிகளும் ஏனைய முஸ்லிம் கட்சியினரும் கடுமையாக எதிர்க்கின்றனர் எனத் தகவல்.

அதே சமயம் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுதரப்புக்கு குத்துக்கரணம் அடித்துள்ள வடிவேல் சுரேஸூக்கு அரசுத் தரப்புக்குள் முக்கியத்துவம் கொடுக்கின்றமை ஏற்கனவே ஜனாதிபதி ரணிலுக்கு முண்டு கொடுத்து நிற்கும் மொட்டு கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் சுதந்திரக் கட்சியில் இருந்து ரணில் தரப்புக்கு மாறியுள்ள சம்பத் திசநாயக்காவுக்கும் ஆளும் தரப்புக்குள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றினால் அதிருப்தி அடைந்துள்ள பதுளை மாவட்டத்தின், மொட்டுக் கட்சி பிரதிநிதியான நகர அபிவிருத்தி, வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் தேனுகா விதான கமகே சீற்றத்தில் ஆழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அவர் விரைவில் எதிர்க்கட்சிகள் பக்கம் போய் இருப்பார்கள் என்று விடய மறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

-காலைமுரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கூட்டுக்குள் குழப்பம்… | Tamil Leader | We Lead the Nation