Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மற்றுமொரு பல்கலைக்கழக மாணவி டெங்கால் உயிரிழப்பு

T

The Leader Desk

ஜனவரி 17, 2024 • 2:12 AM

மற்றுமொரு பல்கலைக்கழக மாணவி டெங்கால் உயிரிழப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவியொருவர், நேற்று உயிரிழந்துள்ளார்.
  • குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது.
  • இவ்வாறானதொரு நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பல்கலைக்கழக மாணவி நேற்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இதேவேளை, 2024 ஜனவரி மாதம் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

மாணவியொருவர், நேற்று உயிரிழந்துள்ளார்.

மபுதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பல்கலைக்கழக மாணவி நேற்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2024 ஜனவரி மாதம் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானடெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பை அடுத்ததாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1076 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...