Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வானுயர எகிறிய மரக்கறிகளின் விலை

T

The Leader Desk

ஜனவரி 16, 2024 • 12:05 PM

வானுயர எகிறிய மரக்கறிகளின் விலை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேலியகொட மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • நுவரெலியா விஷேச பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 1,700 ரூபாயாகக் காணப்படுகிறது என்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 1,500 ரூபாயாகக் காணப்படுகிறது என்றும், அநுராதபுரத்தில் கெரட்டின் விலை 2,000 ரூபாயாகக் காணப்படுகிறதென்றும் தெரியவருகிறது.
  • அந்தவகையில், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை 1,100, போஞசி 1,200 என்ற அடிப்படையில், பேலயகொட மொத்தச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
  • தவிர, ஒரு கிலோகிராம் கோவா – 700, லீக்ஸ் – 450, தக்களி – 400, தேசிக்காய் – 200, வெங்காயத்தாள் - 350 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

பேலியகொட மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பேலியகொடை மொத்த விற்பனை நிலையத்துக்கு, கெரட் உற்பத்திகள் கொண்டுவருவது குறைந்துள்ள நிலையிலேயே, கெரட் விலை அதிகரித்துள்ளதென்று, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, கெரட் அறுவடை குறைவடைந்துள்ளமையே, இந்த விலை அதிகரிப்புக்குக் காரணமென்று தெரியவந்துள்ளது.

நுவரெலியா விஷேச பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 1,700 ரூபாயாகக் காணப்படுகிறது என்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 1,500 ரூபாயாகக் காணப்படுகிறது என்றும், அநுராதபுரத்தில் கெரட்டின் விலை 2,000 ரூபாயாகக் காணப்படுகிறதென்றும் தெரியவருகிறது.

இந்த விலைக்கேற்ப, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுளு்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை 1,100, போஞசி 1,200 என்ற அடிப்படையில், பேலயகொட மொத்தச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தவிர, ஒரு கிலோகிராம் கோவா – 700, லீக்ஸ் – 450, தக்களி – 400, தேசிக்காய் – 200, வெங்காயத்தாள் - 350 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 400 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் சின்ன வெங்காயம் 350 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கிழங்கு 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் போஞ்சி மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றின் விலைகள், ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தினூடாக மரக்கறி கொள்வனவு செய்யவரும் சில்லரை வியாபாரிகளின் எண்ணிக்கை இந்நாட்களில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...