Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘உலகின் முதல்தர நாடாக இலங்கையை மாற்ற அணிதிரளுங்கள்’

T

The Leader Desk

ஜனவரி 15, 2024 • 6:47 AM

‘உலகின் முதல்தர நாடாக இலங்கையை மாற்ற அணிதிரளுங்கள்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
  • தைப்பொங்கல் பண்டிகை, சூரிய பகவான் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாக சுட்டிக்காட்டலாம்.
  • தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைவாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் தொடர்பில் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மானுட வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்து நாம் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறோம். உலகிற்கு உயிர் கொடுக்கும் சூரிய பகவானை வழிபடுவது பண்டைய காலத்திலிருந்தே நடந்து வருகிறது.

தைப்பொங்கல் பண்டிகை, சூரிய பகவான் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாக சுட்டிக்காட்டலாம்.

தைப்பொங்கல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த நிகழ்வாகும், மேலும் இந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்ல எண்ணங்களைச் சேர்க்கும் பண்டிகை என்றும் அழைக்கலாம்.

புதிய அறுவடையை சூரிய பகவானுக்கு படைத்து அடுத்து வரும் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர வேண்டப்படுகின்றது.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்மிக்க ஆண்டின் முடிவில் இன்னும் பல சவால்களுடன் இன்னுமொரு ஆண்டிற்குள் நுழைந்துள்ளோம். இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

இதற்குத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்களை இந்தத் தைப்பொங்கல் தினத்தில் பெற்று உலகின் முதல்தர நாடாக மாறுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன் என கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...