Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

“நியாயமான தீர்வைத் தராமல் இவ்வருடமும் ஏமாற்றினால் வேறு விளைவுகள் ஏற்படும்”

T

The Leader Desk

ஜனவரி 15, 2024 • 6:37 AM

“நியாயமான தீர்வைத் தராமல் இவ்வருடமும் ஏமாற்றினால் வேறு விளைவுகள் ஏற்படும்”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
  • அந்தப் பேச்சுகளுக்குத் தமிழ்த் தரப்பினர் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினர்.
  • “தமிழ்பேசும் மக்கள் தமது தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
எழுத்து அளவு:

தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

“தமிழ்பேசும் மக்கள் தமது தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதாவது தமிழர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய நிலைமை வடக்கு - கிழக்கில் ஏற்பட வேண்டும். எனவே, இந்த வருடத் தைப்பொங்கல் தமிழர்களுக்கு அதிமுக்கியமான பொங்கல். இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒரு நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வு எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இந்த நன்னாளில் பிரார்த்தனை செய்கின்றேன். இலங்கையில் நீண்ட காலமாகத் தேசிய இனப்பிரச்சினை தொடர்கின்றது. இன்னமும் அரசியல் தீர்வு காணப்படவில்லை.

“இந்த நாட்டில் பெரும்பான்மை இனமாக வாழும் சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனமாக வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையில் அரசியல் சாசனம் ரீதியாக எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படவில்லை. இது சம்பந்தமாகக் கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றன. அந்தப் பேச்சுகளுக்குத் தமிழ்த் தரப்பினர் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினர். ஆனால், இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசுகள் தீர்வை வழங்க முன்வரவில்லை. இந்த நிலைமை இனியும் தொடர இடமளிக்க முடியாது.

“தமிழ்பேசும் மக்கள் எதிர்பார்ப்பது, தாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் - தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் - அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் - எமது தமிழ்த் தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும். அதாவது அவர்களுடைய தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய நிலைமை வடக்கு - கிழக்கில் ஏற்பட வேண்டும்.

“ஆனபடியால் இந்த வருடத் தைப்பொங்கல் தமிழர்களுக்கு அதிமுக்கியமான பொங்கல். இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம். நாம் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். இனியும் ஏமாற முடியாது. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் நியாயமான அரசியல் தீர்வு வேண்டும்.

“உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அந்தத் தீர்வு இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“நியாயமான தீர்வைத் தராமல் இவ்வருடமும் ஏமாற்றினால் வேறு விளைவுகள் ஏற்படும்” | Tamil Leader | We Lead the Nation