Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தண்டனை விதிக்கப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

T

The Leader Desk

ஜனவரி 15, 2024 • 6:30 AM

தண்டனை விதிக்கப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.
  • அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
  • குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
  • மதன்சேகருக்கு மார்ச் 29, 2023 அன்று அவசரகால விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபகஷவின் பரிந்துரையின் பேரில் கைதிகளான நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் கைதிகள் நல்ல நடத்தையை வெளிப்படுத்தியதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மதன்சேகருக்கு மார்ச் 29, 2023 அன்று அவசரகால விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கிருபாகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.

எனினும், ஜூலை 20, 2022 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...