Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'தமிழர்கள் நிம்மதியாக வாழ ராஜபக்ஷக்களே காரணம்'

T

The Leader Desk

ஜனவரி 14, 2024 • 1:50 PM

'தமிழர்கள் நிம்மதியாக வாழ ராஜபக்ஷக்களே காரணம்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
  • “2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்துக்கு நாம் முடிவு கட்டிய பின்னர் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள்.
  • அவர்கள், தமிழ் மக்கள் மீது போராட்ட சிந்தனையைத் தூண்டினாலும் அந்த மக்கள் மீண்டும் போரை விரும்பவில்லை.
  • “அதை நாம் அவர்களுக்கு 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தவுடன் ஏற்படுத்திக் கொடுத்து விட்டோம்.
எழுத்து அளவு:

பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்தால் இந்த நாட்டில் மூவின மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

“2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்துக்கு நாம் முடிவு கட்டிய பின்னர் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். ஆனால், அவர்களை வைத்துக்கொண்டு இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளும், வெளிநாடுகளில் வாழும் புலிகளின் ஆதரவாளர்களும் சுயலாப அரசியலை நடத்துகின்றனர்.

“இது கவலையை ஏற்படுத்தும் விடயம். அவர்கள், தமிழ் மக்கள் மீது போராட்ட சிந்தனையைத் தூண்டினாலும் அந்த மக்கள் மீண்டும் போரை விரும்பவில்லை. நிம்மதியான வாழ்க்கையே அவர்களின் விரும்பம்.

“அதை நாம் அவர்களுக்கு 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தவுடன் ஏற்படுத்திக் கொடுத்து விட்டோம். வடக்கு - கிழக்கில் ராஜபக்ஷக்களை ஆதரிக்கும் தமிழ் உறவுகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு நாம் என்றும் நன்றி கூறுவோம்.

“எதிர்வரும் தேர்தல்களில் வடக்கு - கிழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படாது. வழமை போன்று எமக்குரிய வாக்குகள் கிடைக்கும். மொட்டுக் கட்சியின் வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பும் முக்கிய இடம் வகிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- மாலைமுரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...