Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து பாடுபடுவேன்’

T

The Leader Desk

ஜனவரி 13, 2024 • 3:42 AM

‘தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து பாடுபடுவேன்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சி மூலமாகத் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பேன்” என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
  • கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகளை முன்னெடுப்பேன்” என்றார்.
  • இதன்போது இணக்கப்பாட்டுடன் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

கட்சி மூலமாகத் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பேன்” என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 கட்சித் தலைவரைத் தெரிவு செய்வதற்கு வாக்களிப்பது சிறந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை காரியாலயத்தில் நேற்று கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சியில் இணக்கப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்தபோது சாத்தியப்படாது என்ற தீர்மானத்துக்கு அமைய ஜனநாயக ரீதியாக வாக்களிப்பதே சிறந்தது எனக் கலந்துரையாடப்பட்டுள்ளது. நான் கட்சியின் தலைவராக வருவேன் என யாராலும் கூற முடியாது.

“எனினும், கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகளை முன்னெடுப்பேன்” என்றார்.

“இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்யும் நோக்கில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இணக்கப்பாட்டுடன் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தனர்.

எனினும், இந்தப் பேச்சில இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை. இதையடுத்து வாக்களிப்பு மூலம் தலைவரைத் தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

-காலைமுரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...