Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

கப்பலில் எம்.பிக்களுக்கு ஆடம்பர விருந்து: இராஜாங்க அமைச்சர் விளக்கம்

T

The Leader Desk

ஜனவரி 11, 2024 • 4:00 PM

கப்பலில் எம்.பிக்களுக்கு ஆடம்பர விருந்து: இராஜாங்க அமைச்சர் விளக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த விடயம் தொடர்பாக இன்று விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அகில இலங்கை தொழிற்சங்கத்தின் தலைவர் ஒருவர் இந்த விருந்துபசாரத்திற்கு 25 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
  • சென்வீட்ஜ், கேக், ரோல்ஸ் இற்காக 14, 790 ரூபாய் எனது சொந்த நிதியில் செலவிடப்பட்டது.
  • அத்தோடு, நான் இன்பச் சுற்றுலாவாக அங்கு செல்லவில்லை.
எழுத்து அளவு:

இந்த விடயம் தொடர்பாக இன்று விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அகில இலங்கை தொழிற்சங்கத்தின் தலைவர் ஒருவர் இந்த விருந்துபசாரத்திற்கு 25 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“இன்னொரு இடத்தில் கோடிக் கணக்கில் இதற்கு செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. எனது சொந்த செலவிலேயே இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறான பொய்யான தகவல்களினால் தான், இந்த நாடு கடந்த காலங்களில் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது.

“இந்த விருந்துபசாரத்திற்கான அனைத்து பற்றுச் சீட்டுக்களும் என்னிடம் உள்ளன. சென்வீட்ஜ், கேக், ரோல்ஸ் இற்காக 14, 790 ரூபாய் எனது சொந்த நிதியில் செலவிடப்பட்டது. அத்தோடு, நான் இன்பச் சுற்றுலாவாக அங்கு செல்லவில்லை. ஆய்வொன்றுக்காகவே சென்றோம்.

“வரவு - செலவுத்திட்ட விவாதத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைமுகத்தை பார்வையிட வேண்டும் என கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

“இதனால்தான் நான் இந்த ஏற்பாடை செய்திருந்தேன். துறைமுகங்கள் மற்றும் கப்பற்போக்குவரரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடமும் இதற்காக நாம் அனுமதியை பெற்றிருந்தோம். இந்த நிலையில், உண்மைகளை மூடிமறைத்துதான், இந்த பொய்யான கதைகள் பரப்பப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...