Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட இளம் அரசியல்வாதி

T

The Leader Desk

ஜனவரி 9, 2024 • 4:33 PM

பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட இளம் அரசியல்வாதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேக்ரானால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34) என்ற இளம் வயது அரசியல்வாதி ஒருவர் ஆவார்.
  • குறித்த நபர், பத்து வருடங்களுக்கு முன் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்ததோடு, 2017ஆம் ஆண்டு மேக்ரான் தேர்தலில் வென்றபோது, கேப்ரியல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
  • வயதில், கல்வித்துறையில் ஜூனியர் அமைச்சரான கேப்ரியலுக்கு, 2020 இல் பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
  • மேக்ரான் மீண்டும் அதிபராக பதவியேற்றபோது, சிறிது காலம் பட்ஜெட் அமைச்சராக இருந்த கேப்ரியலுக்கு, கடந்த ஜூலை மாதம் கல்வித்துறை கையளிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

மேக்ரானால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34) என்ற இளம் வயது அரசியல்வாதி ஒருவர் ஆவார்.

இந்நிலையில், பிரான்ஸ் வரலாற்றில், இவ்வளவு இளம் வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் இவர் ஆவார். குறித்த நபர், பத்து வருடங்களுக்கு முன் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்ததோடு, 2017ஆம் ஆண்டு மேக்ரான் தேர்தலில் வென்றபோது, கேப்ரியல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அத்தோடு, திறம்பட நாடாளுமன்றத்தில் வாதாடும் கேப்ரியல், மேக்ரானின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 29 வயதில், கல்வித்துறையில் ஜூனியர் அமைச்சரான கேப்ரியலுக்கு, 2020 இல் பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மேக்ரான் மீண்டும் அதிபராக பதவியேற்றபோது, சிறிது காலம் பட்ஜெட் அமைச்சராக இருந்த கேப்ரியலுக்கு, கடந்த ஜூலை மாதம் கல்வித்துறை கையளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அணியும் அபயாவுக்கு எதிதிராக அவர் நடவடிக்கை எடுத்தபோது, எடுத்த விடயத்தில் உறுதியாக நிற்கும் கேப்ரியலின் உறுதி, மேக்ரானுக்கு தெரியவந்தது.

ஆனால், அவை மட்டுமே மேக்ரான், கேப்ரியலை பிரதமராக தேர்வு செய்யக் காரணம் என்றும் கூறிவிடமுடியாது. ஏனென்றால், இதற்கு முன் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், வெறும் 20 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடித்தார். இந்நிலையிலேயே, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பிரபலமான கேப்ரியலை அந்த இடத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

மேலும், ஜூன் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதோடு பிரான்ஸ் அரசை தேர்தலுக்கு வழிநடத்தும் பொறுப்பு கேப்ரியலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...