Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஐமச எம்.பி பதவி விலகினார்; வெற்றிடத்துக்கு புதிய முகம்

T

The Leader Desk

ஜனவரி 9, 2024 • 9:07 AM

ஐமச எம்.பி பதவி விலகினார்; வெற்றிடத்துக்கு புதிய முகம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடிதத்தை அவர், இன்றைய தினம் (09) சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.
  • ஆனால், இந்த மைக்கில் பேசினால் மாத்திரம்தான் ஹன்சார்ட்டில் பதிவு செய்யப்படுமென்று நீங்கள் ஒருமுறை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறீர்கள்.
  • அவர், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

கடிதத்தை அவர், இன்றைய தினம் (09) சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

மனசாட்சிக்கு இணங்கி, தான் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, அவர் இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “சபாநாயகர் அவர்களே, நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை, உங்களிடமும் நாடாளுமன்றச் செயலாளரிடமும் கையளித்துள்ளேன். அதனை நீங்கள் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் நான் உட்பட எம்.பிக்கள் உரையாற்றும் விதம் பதிவு செய்யப்படுகின்றன. ரெகோர்ட் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த மைக்கில் பேசினால் மாத்திரம்தான் ஹன்சார்ட்டில் பதிவு செய்யப்படுமென்று நீங்கள் ஒருமுறை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறீர்கள்.

‘மக்கள் பக்கம் இருந்து யோசித்துதான் இந்த முடிவை எடுத்தேன். நானும் குற்றவாளி என்று மக்கள் நினைக்கிறார்கள், மனசாட்சிப்படி எனது அரசியல் நடத்தை எனக்கு தெரியும். என் குழந்தைகளை நினைத்து, மக்களின் சாபத்தை நினைத்து, இந்த முடிவை எடுத்தேன். மக்கள் ஆணையின் பேரில் நாடாளுமன்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் இந்த முடிவை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...