Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தயாசிறிக்கு தடை உத்தரவு: பதவி தேவையில்லை என்றும் அறிவிப்பு

T

The Leader Desk

ஜனவரி 8, 2024 • 10:29 AM

தயாசிறிக்கு தடை உத்தரவு: பதவி தேவையில்லை என்றும் அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இந்த உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.சந்துன் விதானகே உத்தரவிட்டுள்ளார்.
  • எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதில் தனக்கு பிரச்சினை இல்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எனது உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமையால் தான் சுயேட்சையாக இருப்பதாகவும், தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவது மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தவறான பரிந்துரைகளைச் செய்வதைத் தவிர்க்கும் வகையில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.சந்துன் விதானகே உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் செயலாளர் நாயகம் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகி தேர்தல் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதில் தனக்கு பிரச்சினை இல்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எனது உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமையால் தான் சுயேட்சையாக இருப்பதாகவும், தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்மாதிரியான அரசியல் இயக்கத்திற்கான தேசிய இயக்கத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

18 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் திறன் தமக்கு இருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வலுவான நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை வலுப்படுத்துவதற்கு ஏதாவது பங்களிப்பை கோரினால் அதனை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...