Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘பிக்குகளின் ஆதரவைப் பெற தமிழ்ப் பிரிவினைவாதிகள் சூழ்ச்சி’

T

The Leader Desk

ஜனவரி 8, 2024 • 4:36 AM

‘பிக்குகளின் ஆதரவைப் பெற தமிழ்ப் பிரிவினைவாதிகள் சூழ்ச்சி’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
  • மறுபுறத்தில் உலகத் தமிழ் பேரவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
  • பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர்.
எழுத்து அளவு:

இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்தான் தடுக்கப்பட்டு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு பயங்கரமான நிலையை எதிர்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறானதொரு நிலைமையை எதிர்கொள்ளவில்லை. ஜனாதிபதியின் படமொன்று அண்மையில் ஊடகத்தில் வெளியானது. ஒரு புறத்தில் பிக்குகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் இருந்தனர். மறுபுறத்தில் உலகத் தமிழ் பேரவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.

“இமயமலை பிரகடனம் எனக்கூறி பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆறு யோசனைகள் உள்ளன. இலங்கையை சமஸ்டி நாடாக்கி, அதன்மூலம் ஈழத்தை அடைவதே அதன் நோக்கமாகும்.

“ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இமயமலை பிரகடனத்துக்கு இணக்கம் என்ற தகவலை தற்போது அவர்கள் பரப்பி வருகின்றனர்.

“தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப இந்நாடு சமஸ்டி நாடாக மாறாமல் இருப்பதற்கு பிக்குகள் சமூகமே காரணம். எனவே இந்த இமயமலை பிரகடனத்துக்கு இணங்ககூடாது” என கலாநிதி குணதாச அமரசேகர வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...