Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
News

தனி விமானத்தில் இலங்கை வந்தார் விஜய்?

T

The Leader Desk

ஜனவரி 5, 2024 • 4:19 PM

தனி விமானத்தில் இலங்கை வந்தார் விஜய்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைபவ், பிரேம்ஜீ, சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
  • இதனையடுத்து, புதுவருடத்தை முன்னிட்டு படக்குழு படப்பிடிப்பு நடவடிக்கைகளை ஒத்திவைத்தது.
  • இந்நிலையில், தளபதி - 68 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை வருவது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகி வந்தன.
எழுத்து அளவு:

வைபவ், பிரேம்ஜீ, சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

vijay.jpg

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக, நடிகர் விஜய், தனி விமானத்தில் இலங்கை வந்ததற்கான வீடியோ, சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது. இருப்பினும், அவர் இலங்கை வந்துவிட்டாரா என்பது உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை. விஜயின் இலங்கை விஜயத்தை, படக்குழு இரகசியமாக வைத்திருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதனையடுத்து, புதுவருடத்தை முன்னிட்டு படக்குழு படப்பிடிப்பு நடவடிக்கைகளை ஒத்திவைத்தது.

இந்நிலையில், தளபதி - 68 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.  குறிப்பாக இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை வருவது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகி வந்தன.

இந்நிலையில், நடிகர் விஜய் இலங்கை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையை உலக வரைப்படத்தில் இருந்து நீக்குவதாக எச்சரிக்கும் வகையில் பேசிய காணொளிகள் மீள பகிரப்பட்டு வந்தன.

இதனை அவதானித்த சினிமா விமர்சகர்கள் நடிகர் விஜய்யின் வருகையை இலங்கையர்கள் சிலர் எதிர்க்கக்கூடும் எனவும், அதேவேளை, விஜய்யின் வருகையை சினிமா ரசிகர்கள் என்ற வகையில் பலர் எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விஜய் அண்மையில் விஜயகாந்தின் இறுதி சடங்குகளுக்கு சென்றிருந்த வேளையில் சிலர் அவர் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...