Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்’

T

The Leader Desk

ஜனவரி 5, 2024 • 1:49 PM

‘தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் 2023ஆம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் நடைபெற்றது.
  • இதன்போது எடுக்கப்பட்டதீர்மானத்தின்படி தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27, 28ஆம் நாட்களில் என்,சி, வீதி உப்புவெளி, திருகோணமலை என்னும் முகவரியில் அமைந்துள்ள “ஜேக்கப் வீச் றிசோட்” எனும் மண்டபத்தில் நடைபெறும்.
  • மேற்படி மாநாட்டுக் கூட்டம் மு.ப.10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுமென்பதை கட்சி அமைப்பு விதியான 10(உ) இற்கு அமைவாக இத்தால் தெரியப்படுத்துகின்றேன்.
எழுத்து அளவு:

ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் 2023ஆம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் நடைபெற்றது.

இதன்போது எடுக்கப்பட்டதீர்மானத்தின்படி தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27, 28ஆம் நாட்களில் என்,சி, வீதி உப்புவெளி, திருகோணமலை என்னும் முகவரியில் அமைந்துள்ள “ஜேக்கப் வீச் றிசோட்” எனும் மண்டபத்தில் நடைபெறும்.

குறித்த மாநாடு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும். மேற்படி மாநாட்டுக் கூட்டம் மு.ப.10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுமென்பதை கட்சி அமைப்பு விதியான 10(உ) இற்கு அமைவாக இத்தால் தெரியப்படுத்துகின்றேன். ”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. ”என கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...