Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இன்று ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை

T

The Leader Desk

ஜனவரி 4, 2024 • 3:36 AM

இன்று ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “2298 பரீட்சை நிலையங்களில் 346976 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, 319 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • “பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்குச் செல்வதற்கு இறுதித் தருணம் வரை காத்திருக்க வேண்டாம்.
  • “பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கு ஏதேனும் இடையூறு இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது பரீட்சை திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் 1911 இலக்கத்திற்கு அழைக்கலாம்.
எழுத்து அளவு:

இதனை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“2298 பரீட்சை நிலையங்களில் 346976 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, 319 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பொலன்னறுவை, வெலிகந்த, அரலகங்வில, திம்புலாகல ஆகிய கல்விப் பிரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாதுகாப்பான வேறு இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அந்த நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை சீட்டுகள் செல்லுபடியாகும்.

“பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்குச் செல்வதற்கு இறுதித் தருணம் வரை காத்திருக்க வேண்டாம். குறைந்தது அரை மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

“பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கு ஏதேனும் இடையூறு இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது பரீட்சை திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் 1911 இலக்கத்திற்கு அழைக்கலாம்.

“பரீட்சை காலத்தில் ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளதோடு, அந்த நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப செயற்படும்.” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...