Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஜனாதிபதியின் யாழ். விஜயம்: போராட்டத்துக்கு தயாரான தமிழ் எம்பிக்களுக்கு எதிராக வழக்கு

T

The Leader Desk

ஜனவரி 3, 2024 • 3:47 AM

ஜனாதிபதியின் யாழ். விஜயம்: போராட்டத்துக்கு தயாரான தமிழ் எம்பிக்களுக்கு எதிராக வழக்கு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், யாழ்ப்பாணம் பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (02) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு 04ம் திகதி முதல் 07ம் திகதி வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் வகையில் தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
  • இது தொடர்பில் நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், இன்று புதன்கிழமை (03) தங்கள் தரப்பு நிலைப்பாட்டினைமுன்வைக்குமார் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.
எழுத்து அளவு:

இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், யாழ்ப்பாணம் பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (02) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு 04ம் திகதி முதல் 07ம் திகதி வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் வகையில் தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், இன்று புதன்கிழமை (03) தங்கள் தரப்பு நிலைப்பாட்டினைமுன்வைக்குமார் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதியின் யாழ். விஜயம்: போராட்டத்துக்கு தயாரான தமிழ் எம்பிக்களுக்கு எதிராக வழக்கு | Tamil Leader | We Lead the Nation