Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தென்கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து

T

The Leader Desk

ஜனவரி 2, 2024 • 4:48 AM

தென்கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.
  • தாக்குதல் நடத்தியவர், லீயின் பெயர் பொறிக்கப்பட்ட காகித கிரீடத்தை அணிந்திருந்த 50 அல்லது 60 வயதுமதிக்கத்தக்க நபர் ஆவார்.
  • ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களின் கூட்டத்திற்கு மத்தியில் லீ ஜே-மியுங் நின்று கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
எழுத்து அளவு:

அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

புதிதாக கட்டப்பட இருக்கும் விமான நிலையத்தை சுற்றிப்பார்க்க லீ ஜே-மியுங் பூசானுக்கு சென்றிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லீ ஜே-மியுங்கின் இடது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அந்த தாக்குதலை நடத்தியவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

தாக்குதல் நடத்தியவர், லீயின் பெயர் பொறிக்கப்பட்ட காகித கிரீடத்தை அணிந்திருந்த 50 அல்லது 60 வயதுமதிக்கத்தக்க நபர் ஆவார்.

ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களின் கூட்டத்திற்கு மத்தியில் லீ ஜே-மியுங் நின்று கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அப்போது, ஆட்டோகிராப் பெற வேண்டும் என்று கூறி அவரை நெருங்கிய அந்த அடையாளம் தெரியாத நபர், லீ ஜே-மியுங்கின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.

எனவே, அந்த சம்பவத்தின் போது, செய்தியாளர்கள் எடுத்த விடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோ, தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவரால் கத்தியால் குத்தப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுவதைக் காட்டுகிறது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, லீ ஜே-மியுங் உடனடியாக மருத்துவ கவனிப்புக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...