Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக புதிய கூட்டணி அறிவிப்பு

T

The Leader Desk

ஜனவரி 2, 2024 • 4:26 AM

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக புதிய கூட்டணி அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.
  • “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு, ஆனால் தற்போது அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தாத 71 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
  • மக்கள் தூற்றுவார்கள் என்பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் நன்கு அறிவர்.
  • மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்து 22 மாவட்டங்களிலும் வெற்றி பெறக் கூடிய பலம் மிக்க கூட்டணியாக நாம் வலுப்பெறுவோம்”என்றார்.
எழுத்து அளவு:

பெரமுனவுடன் இணையாது. மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்து, அக்கூட்டணிக்கான அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “இவ்வாண்டு நிச்சயம் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டிய ஆண்டாகும் என்பதோடு, அது ஜனாதிபதித் தேர்தலாகவே இருக்கும் என்று நான் நம்புகின்றேன். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பே முதலில் வெளியாகும் என்பது எனது நிலைப்பாடாகும்” என்றார்.

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு, ஆனால் தற்போது அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தாத 71 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்றிலிருந்து எமது புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

“மேலும், பணத்தை மரத்திலிருந்து பறிக்க முடியாது. இன்றிலிருந்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். மக்கள் தூற்றுவார்கள் என்பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் நன்கு அறிவர். மக்கள் எவ்வளவு விமர்சித்தாலும் உண்மைகளையும், யதார்த்தத்தையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

“கோட்டாபாய ராஜபக்ஷ வந்து வரிகளை குறைத்த பின்னர் என்ன நடந்தது? அது அனைவருக்கும் நன்றாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை.

“தற்போது கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஜே.வி.பிக்கும் நாம் சவாலான கூட்டணியாக இருப்போம். மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்து 22 மாவட்டங்களிலும் வெற்றி பெறக் கூடிய பலம் மிக்க கூட்டணியாக நாம் வலுப்பெறுவோம்”என்றார்.

Sepala_Amarasinghe_2024.01.02.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...