Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தனிப்பட்ட இலக்குகளை அடைய விரும்பினால் தாய்நாட்டைப் பற்றி சிந்தியுங்கள்

T

The Leader Desk

ஜனவரி 1, 2024 • 3:59 AM

தனிப்பட்ட இலக்குகளை அடைய விரும்பினால் தாய்நாட்டைப் பற்றி சிந்தியுங்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆயிரத்தோரு தனிப்பட்ட இலக்குகள் இருந்தாலும், அவை அனைத்தையும் வெற்றியடையச் செய்வதற்கு, தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நமது தாய்நாட்டை மீட்பது இன்றியமையாதது” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • அக்கடவுளினால் முன்னோக்கி மாத்திரம் அன்றி, பின்னோக்கியும் பார்க்க முடியுமாம்.!
  • அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே, மேற்கண்டவாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஆயிரத்தோரு தனிப்பட்ட இலக்குகள் இருந்தாலும், அவை அனைத்தையும் வெற்றியடையச் செய்வதற்கு, தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நமது தாய்நாட்டை மீட்பது இன்றியமையாதது” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே, மேற்கண்டவாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த காலங்களில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் மற்றும் துயரங்களைத் தாங்கிக் கொண்டதன் பலனாக நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க எம்மால் முடிந்துள்ளது.

“இருப்பினும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, அதேபாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும். அது மலர் பாதையாக இல்லாமல், முட்களும், கற்களும் நிறைந்த பாதையாகவே அமைந்திருக்கும்.

“இதனால், இலங்கை மீளக் கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இலங்கையராகிய எமது பொறுப்பாகும். ஜனவரி மாதத்திற்கு ஜேனஸ் எனும் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அக்கடவுளினால் முன்னோக்கி மாத்திரம் அன்றி, பின்னோக்கியும் பார்க்க முடியுமாம்.!

“அதனால் எதிர்காலம் தொடர்பில் மட்டுமன்றி, கடந்த காலம் தொடர்பிலும் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக எமது பொறுப்புக்களை அறிந்துகொள்வோம். அவற்றை செயற்படுத்தி, தாய் நாட்டை பலப்படுத்துவோம். அதற்காக பொறுப்புடனும் அர்பணிப்புடனும் செயற்படுவோம். அதனால் புத்தாண்டை செழிப்பானதாக மாற்றிக்கொள்வோம். பிறந்திருக்கும் இந்த ஆண்டு, அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்” என்று, ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...