Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றிபெற மாட்டார்'

T

The Leader Desk

டிசம்பர் 31, 2023 • 6:16 AM

'ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றிபெற மாட்டார்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதோ நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயலாகவே அமையும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
  • வடக்கு, கிழக்கினை மையப்படுத்திய பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அந்த வேட்பாளருக்கு வெறுமனே அப்பகுதிகளில் தான் ஆதரவு கிடைக்கும்.
  • அத்துடன், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய அரசியல் கூட்டணியையும், இன, மத, மொழி வாதற்ற வேட்பாளரையும் அடையாளம் கண்டு அதில் பங்கேற்பதே சிறந்த அரசியல் சாணக்கியமான நடவடிக்கையாக அமையும்.
எழுத்து அளவு:

ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதோ நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயலாகவே அமையும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய அரசியல் கூட்டணியையும், இன, மத, மொழி வாதற்ற வேட்பாளரையும் அடையாளம் கண்டு அதில் பங்கேற்பதே சிறந்த அரசியல் சாணக்கியமான நடவடிக்கையாக அமையும். அவ்வாறு இல்லாது விட்டால் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயற்பாடாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வடக்கு, கிழக்கு தமது பூர்வீகமான பிரதேசம் என்ற நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது பிரதேசத்தினை மையப்படுத்தியதாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கோ அல்லது தேர்தலை மக்களின் ஆதரவுடன் புறக்கணிப்பதற்கோ முழுமையான உரித்தினைக் கொண்டிருக்கின்றன.

ஆனால், யதார்த்த நிலைமைகளைப் பற்றி அக்கட்சிகள் சிந்திப்பது தான் மிகவும் அவசியமானதாகின்றது. வடக்கு, கிழக்கினை மையப்படுத்திய பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அந்த வேட்பாளருக்கு வெறுமனே அப்பகுதிகளில் தான் ஆதரவு கிடைக்கும்.

வடக்கு,கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழ் மக்கள் ஆதரவளிக்காத நிலைமையொன்று ஏற்படுவதற்கே அதிகமான சாத்தியப்பாடுகள் உள்ளன. மறுபக்கத்தில், தமிழ் கட்சிகளின் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை.

அவ்வாறு பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டதன் பின்னர் தேசிய கட்சிகளின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றால் அதன் பின்னர் அசௌகரியத்துக்குள் உள்ளாகப்போவதும் தமிழ் மக்கள் தான். ஆகவே அதுபற்றியும் தமிழ்க் கட்சிகள் கரிசனைகளைக் கொள்வதே பொருத்தமானது.  என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றிபெற மாட்டார்' | Tamil Leader | We Lead the Nation